[X] Close

1,12,575 டாலருக்கு ஏலம்; நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம்


1-12-575

  • kamadenu
  • Posted: 03 May, 2019 17:31 pm
  • அ+ அ-

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் ஒன்று 1,12,575 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா ரோமன் தீவில் உள்ள சிறைச்சாலையில் 27 ஆண்டுகாலம் இருந்தபோது அவர் வரைந்த சாவியுடன் கூடிய கதவு ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மண்டேலாவின் சிறைக்கதவு ஓவியம் 1,12,575 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

மண்டேலா சுமார் 20 - 25 ஓவியங்களை வரைந்திருப்பதாக ஏலம் நடத்திய இயக்குநர் கில்ஸ் பிப்பைட் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர் நெல்சன் மண்டேலா. லண்டன், தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். சட்ட ரீதியாக கல்வியும் பயின்றவர். கருப்பின மக்களின் நலனுக்காகவும் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தியவர். இதற்காக சிறை தண்டனையும் பெற்றவர்.

மண்டேலா அளவுக்கு உலகில் எந்தத் தலைவரும் சிறை தண்டனையை அனுபவித்ததில்லை.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close