[X] Close

தனக்கு ஆபத்து என்றால் தாக்குமாறு பறவைக்கு பயிற்சி அளித்திருக்கும் சிறுமி - வைரலாகும் வீடியோ


  • kamadenu
  • Posted: 03 May, 2019 15:37 pm
  • அ+ அ-

தான் கத்தினால் சம்பந்தப்பட்ட நபரை தாக்கும்படி தனது பறவைக்கு பயிற்சி அளித்திருக்கும் சிறுமியின் வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் திடீரென வைரலாகிவிடும் அவை  அரசியல், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு என  அனைத்து துறை சார்ந்து சுவாரசியமானதாக இருக்கும்.  இதன் மூலம் சாமானியர்களும் பொதுவெளியில் பிரபலமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் ட்விட்டரில்  Lord Flocko என்பவர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில்  என்னுடைய சகோதரர் ( அவர் குறிப்பிட்டது சகோதரியின் மகளாகவும் இருக்கலாம்)மகள் அவள் வளர்க்கும் பறவையை தான் கத்தினால் மற்றவர்களை தாக்க பயிற்சி அளித்து வைத்திருக்கிறாள்” என்று பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அந்தச் சிறுமி கத்தியவுடன் கிளி ஒன்று வேகமாக பறந்து வந்து அவரை தாக்குகிறது.

தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.

வீடியோ

 

இந்த வீடியோவை இதுவரை 20 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close