[X] Close

‘‘தோனியின் பாணியை கடைப்பிடிக்கிறேன்’’- மசூத் அசார் விவகாரத்தில் வெற்றி கண்ட அக்பருதீன் பெருமிதம்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 11:56 am
  • அ+ அ-

மசூத் அசார் விஷயத்தில் தோனியின் பாணியை கடைப்பிடித்தே வெற்றியை ஈட்டியதாக இந்தியாவுக்கான ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே  ராணுவப் பதற்றம் அதிகரித்து, அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை தாக்கி இந்திய விமானப்படை அழித்தது.

இதைத் தொடர்ந்து ஐ.நா.வில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 4 முறை இந்தியா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறாமல் சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் முட்டக்கட்டை போட்டது. ஆனால், இந்த முறை சீனாவின் ஒப்புதலுடன், மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டார்.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்ததில் தொடர்ச்சியாக இந்தியா சார்பாக  பணியாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர்  சையத் அக்பருதின். ஐ.நாவுக்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான அவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் பெரும் வெற்றியை தேடி தந்துள்ளன.

இந்த நிலையில் இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் தோனியின் பாணியை கடைப்பிடிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,”  நான் தோனியின் பாணியை பின்பற்றுகிறேன்.  உங்கள் இலங்கை அடைவதற்கு நீங்கள் முயற்சிக்கும்போது  நீங்கள் நினைப்பதைவிட அதிக நேரம் இருக்கிறது என்று நினைத்து கொள்ளுங்கள். முடித்து விட்டது என்று எப்போதும்  கூறாதீர்கள்.  எதையும் முன்னரே கைவிட்டு விடாதீர்கள்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close