[X] Close

சந்திரனின் மீது 61,000 கிமீ வேகத்தில் மோதிய விண்கல்: வானியல் விஞ்ஞானிகள் தகவல்


61-000

  • kamadenu
  • Posted: 02 May, 2019 20:59 pm
  • அ+ அ-

கடந்த ஜனவரி மாதத்தில்  ‘சூப்பர் பிளட் உல்ஃப் மூன்’ என்று அழைக்கப்பட்ட முழு சந்திர கிரகணத்தன்று விண்கல் ஒன்று சுமார் 61,000 கிமீ வேகத்தில் சந்திரனின் மீது மோதிய பதிவாகியுள்ளதாக ஸ்பானிய வானியல் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

இதனையடுத்து சந்திரமண்டலத்தின் குறுக்காக 15 மீ பள்ளம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்ததாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ராயல் அஸ்ட்ரனாமிக்கல் சொசைட்டியின் மாதாந்திர இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காகவென்றே ஸ்பானிய விஞ்ஞானிகள் சந்திரனில் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் உபகரணம் ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். 8 டெலஸ்கோப்புகள் இதில் ஈடுபடுத்தப்பட்டது.

 

வால்நட்சத்திரம் ஒன்றிலிருந்து பெயர்ந்து விழுந்த ஒரு துண்டு விண்கல்லாக இருக்கலாம் என்றும் இது அளவில் 45 கிலோ எடைகொண்டதாகவும் 60செமீ அளவு கொண்டதாகவும் இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.

 

ஆனால் இது மோதியதன் தாக்கம் சுமார் 1.5 டன்கள் டி.என்.டி. வேதி வெடிபொருள் வெடித்தால் ஏற்படும் தாக்கத்துக்குச் சமமானது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

பூமி போல் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் வளிமண்டலம் சந்திரனுக்குக் கிடையாது என்பதால் பல்வேறு பாறைகளும் சந்திர மண்டலத்தில் மோதுவது வழக்கம்தான் என்கிறனர் விஞ்ஞானிகள்.

 

ஆனால் இந்தப் பாறைகள் மிகப்பெரிய அளவிலான வேகத்தில் வந்து மோதக்கூடியவை, அதனால் இதன் தாக்கத்தை பூமியிலிருந்து பிடிக்க முடியும். இது பெரிய பிளாஸ்ஹ் போன்று தெரியும், அந்த முழு சந்திர கிரகணத்தின் போதே பார்த்த பலரும் இந்த பிளாஷ் தெரிந்ததை வெளியிட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close