[X] Close
 

பெண்களை இனியும் அடிமைப்படுத்தி, வஞ்சிக்க முடியாது: ஜேனட் ஜேக்சனின் உருக்கமான பேச்சு


janet-jackson-s-emotional-speech

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 May, 2018 17:30 pm
  • அ+ அ-

பாப் உலகின் மன்னராக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் சகோதரி ஜேனட் ஜேக்சன். அமெரிக்காவில் அண்மையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜேனட் ஜேக்சன் ஆற்றிய உருக்கமான நன்றி உரை இணைய உலகில் பிரபலமாகியிருக்கிறது.

விழாவில் பேசிய அவர், "இந்த விருதினை எனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் (பெண்கள்) எதிர்கொண்ட அத்தனை சவால்களையும் வென்று வரலாற்றில் மகத்துவமான இடத்தில் இப்போது நிற்கிறோம். இந்தத் தருணம் பெருமைக்குரியது. 

பெண்கள் இனியும் அடிமைப்படுத்தப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படமாட்டார்கள். அந்தக் காலம் மலையேறிவிட்டது. பெண் விடுதலைக்காகவும் பாலின பேதத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அத்தனை பெண்களுக்கும், ஏன், எங்களுக்குத் தோள் கொடுக்கும் ஆண்களுக்கும் நான் உற்ற துணையாக இருப்பேன்.

எங்கள் குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலிக்கும் தருணம் இது. இந்த வேளையில் நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். ஒரு கலைஞராக எனது வாழ்க்கையை நகர்த்த எனக்கு சக்தியைத் தந்த இறைவனுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அவர் இவ்வாறு பேசி முடிக்க அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு கர ஒலி எழும்பியது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close