[X] Close

நீதிமன்ற ஆணையை மீறியதால் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை


50

  • kamadenu
  • Posted: 01 May, 2019 18:23 pm
  • அ+ அ-

-ஏ.எப்.பி.

பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் ஆணையை மீறியதால் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே  அமெரிக்கா தொடர்பான பல தரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது.

 

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இ-மெயில் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அவர் மீது  குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து அசாஞ்சேவுக்கு இணைய வசதி மறுக்கப்பட்டு  24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

 

இதைத் தொடர்ந்து 47 வயதான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர்.  ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் ஆணையை மீறியதற்காக, அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  2012 ஸ்வீடனில் பாலியல் வன்முறை வழக்கு குறித்து தீர்ப்பளித்தார் பிரிட்டிஷ் நீதிபதி. இதனால் ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தால் அசாஞ்சே கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிமன்ற ஆணையை மீறி லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

 

அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ்நீ திமன்றத்தின் ஆணையை மீறியதற்காக, அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர் சுமார் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close