[X] Close

அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரம்: அமெரிக்க பல்கலையில் மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி; மூவர் கவலைக்கிடம்


2

  • kamadenu
  • Posted: 01 May, 2019 16:21 pm
  • அ+ அ-

-ராய்ட்டர்ஸ்

 

அமெரிக்காவின், வடக்கு கரோலினாவின் சார்லட் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

இதுதொடர்பாக வெளியான ஆரம்பகட்டத் தகவலின்படி, அங்கிருந்த பள்ளியைச் சேர்ந்த மாணவன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக சார்லட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சாண்டி கூறும்போது, ''இந்தத் தாக்குதலில் மாணவன் ஒருவர் மட்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் கென்னடி ஹாலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்..

 

துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை அடுத்து பல்கலைக்கழகத்தின் ட்விட்டர் பக்கத்தில் சுமார் 6 மணிக்கு முன்னதாக ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில் ''ஓடுங்கள், மறைந்துகொள்ளுங்கள், சண்டைபோடுங்கள், உடனடியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று பதிவிடப்பட்டது.

 

இதுதொடர்பாக தனது இணையதளத்தில் பதிவிட்ட பள்ளி நிர்வாகம், பள்ளி வளாகம் தற்போது பூட்டப்பட்டுள்ளதாகவும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

 

அமெரிக்கப் பள்ளிகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் பெருகி உள்ளது குறித்து அங்குள்ள ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close