[X] Close

சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்படுகிறார்?- ஐநாவில் இன்று முடிவு


  • kamadenu
  • Posted: 01 May, 2019 13:52 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

சர்வதேச தீவிரவாதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை அறிவிப்பது தொடர்பாக ஐ.நா.வில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கடந்த 4 முறை முட்டுக்கட்டை போட்டுவந்த சீனா, இந்த முறை தனது பிடிவாதங்களை தளர்த்தி ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், சீனா  தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை ஆய்வு செய்ய இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியதால் தீர்மானம் நிறைவேற்றப்படுவது தடைசெய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க 4-வதுமுறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், 1267 அல் கொய்தா தடைக் குழு இன்று ஐ.நா.வில் கூடுகிறது.அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினரான சீனா, கடந்த காலங்களில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க விதித்துவந்த முட்டுக்கட்டைகளை விலக்கிக்கொள்ள முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர ஜெங் சுவாங் , மசூத் அசார் மீதான தடை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், " 1267 அல்கொய்தா தடைக்குழு இன்று கூறி முக்கிய முடிவுகளை எடுக்கிறது. அதில் எங்களின் கருத்துக்களை தெரிவிப்போம். தற்போது நடக்கும் கூட்டத்திலும் இரு முக்கிய விஷயங்களை வலியுறுத்துவோம்.

முதலாவதாக 1267 குழு கொண்டு தீர்மானத்தை ஆதரிப்போம், அந்த குழுவால் பேசப்பட்டு ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும், இதுதான் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக இருக்கும். இரண்டாவதாக தடைக்குழுவுக்கு உள்ளாகவே சில ஆலோசனைகள் நடந்து வருகின்றன,  அதில் நல்ல முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக அனைத்து நாடுகளும் கூட்டாக எடுக்கும் முயற்சி என்பதால், அந்த விஷயம்முறைப்படி தீர்க்கப்படும் " எனத் தெரிவித்தார்.

மேலும் இன்றைய கூட்டத்தில் மசூத் அசாரின் சொத்துக்களை சர்வதேச அளவில் முடக்குவது, வெளிநாடுகளுக்கு செல்வதில் இருந்து தடை விதிப்பது, ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எந்த நாடும் ஆயுதங்களை, தளவாடங்களை விற்பனை செய்யாமல் இருப்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்படுகின்றன

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close