[X] Close

எவரெஸ்ட் பகுதியில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்


  • kamadenu
  • Posted: 01 May, 2019 07:57 am
  • அ+ அ-

நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அவர்களுக்கு உதவியாக உள்ளூர் ஷெர்பாக்கள் செல்கின்றனர். இவர்கள் கொண்டுசெல்லும் ஆக்ஸிஜன் குடுவைகள், பீர் பாட்டில்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மக்கும் மற்றும் மக்காத பொருட்களை பயன்பாட்டுக்கு பிறகு அங்கேயே விட்டுவருகின்றனர். இதனால் எவரெஸ்ட் பகுதியில் குப்பை அதிகரித்து, சூழல் மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் எவரெஸ்ட் பகுதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சோலுகும்பு மாவட்டத்தின் கும்பு பாசாங் லஹாமு ஊரக நகராட்சி தலைமையில் தொடங்கப்பட்டுள்ள இப்பணிக்கு பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் உதவி வருகின்றன.

நேபாள புத்தாண்டு தினமமான ஏப்ரல் 14-ம் தேதி இப்பணி தொடங்கியது. மே 29 வரை 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 10 ஆயிரம் கிலோ குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்பதே திட்டத்தின் இலக்காகும். இந்நிலையில் நேபாள சுற்றுலாத் துறை இயக்குநர் தண்டு ராஜ் கிமிரே கூறும்போது, “எவரெஸ்ட் அடிவார முகாமை சுத்தம் செய்யும்போது அங்கு 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. எவெரஸ்ட் பகுதியில் வேறு உடல்கள் காணப்பட்டாலும் அவையும் கீழே கொண்டுவரப்படும். இதுவரை 3,000 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் பகுதியில் சேகரிக்கப்படும குப்பைகள் நம்சே டவுனில் காட்சிக்கு வைக்கப்படும். பிறகு இந்தக் குப்பைகள் காத்மாண்டு கொண்டுசெல்லப்பட்டு, உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி அங்கு காட்சிக்கு வைக்கப்படும். பிறகு மறுசுழற்சி செய்யப்படும். இந்த சீசனுக்கு வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் 500 பேரும் அவர்களுக்கு உதவியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எவரெஸ்ட் உயர் முகாம்களுக்கு செல்வார்கள் என கருதுகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close