[X] Close

தொழிலதிபர் நெஸ் வாடியாவுக்கு ஜப்பானில் சிறை தண்டனை: போதை பொருள் வைத்திருந்த வழக்கில் தீர்ப்பு


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 16:03 pm
  • அ+ அ-

இந்திய தொழிலதிபர் நெஸ் வாடியாவுக்கு போதை பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக ஜப்பான் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாம்பே டையிங், பிரிட்டானியா பிஸ்கட் உள்ளிட்ட பல்துறை சார்ந்த தொழில்களை வாடியா குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இதன் தலைவரான நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியா (வயது 47). ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் நெஸ் வாடியா இருந்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த மாதம் விடுமுறையை கொண்டாட ஜப்பான் சென்ற நெஸ் வாடியா போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அங்குள்ள விமான நிலையத்தில், 25 கிராம்  போதைப்பொருளை  பாக்கெட்டுக்குள் மறைத்து அவர் எடுத்து சென்றதாக தெரிகிறது.

தனது சொந்த தேவைக்காகவே எடுத்து வந்துள்ளதாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை எனவும் ஜப்பான் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். எனினும் அதனை ஏற்க ஜப்பான் காவல்துறை மறுத்து விட்டது.

போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பான சட்டம் மிக கடுமையாக உள்ள ஜப்பானில் இதற்கான தண்டனையும் அதிகம். நெஸ் வாடியாவை கைது செய்து ஜப்பான் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக ஜப்பான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வாடியா குழும நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ‘‘ஜப்பான் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளபோதிலும், அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளது. எனவே நெஸ் வாடியா உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது’’ என தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close