[X] Close

'மகனே உன்னை மிகவும் நேசிக்கிறேன்'- 28 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து மீண்ட தாய் நெகிழ்ச்சி


28

  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 15:25 pm
  • அ+ அ-

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 59 வயதுப் பெண் முனிரா அப்துல்லா. இவர் 1991-ல் தனது 4 வயது மகன் ஒமர் வெபய்ரைப் பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது லாரி மோதியது. இதில் மகன் ஒமரைக் கட்டியணைத்தவாறே விபத்தை எதிர்கொண்டார் முனிரா. இதில் ஒமர் சிறிய காயங்களுடன் தப்பினார்.

ஆனால் தாய் முனிரா கோமா நிலைக்குச் சென்றார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றபோதிலும் முனிராவின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த செய்தி குறித்து அறிந்த அமீரக பட்டத்து இளவரசர் முனிராவின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஜெர்மனியில் முனிராவுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 28 ஆண்டுகள் கழித்து தன்னுடைய மகனின் குரல் கேட்டு மீண்டெழுந்தார் முனிரா.தாய் மீண்டு வருவார் என்று நெடு நாட்கள் காத்திருந்த மகன் ஒமருக்கு இப்போது 32 வயது ஆகிவிட்டது. இருந்தாலும் மகனை அடையாளம் அண்டுகொண்டார் முனிரா. மெல்லச் சிரித்தார்.

தன் தாயின் படுக்கை அருகே மண்டியிட்ட ஒமர், ''அம்மா என்னை நேசிக்கிறீர்களா?'' என்றார். உடைந்த குரலில், ''ஆம்'' என்றார் தாய். ''உங்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இருவரும் சேர்ந்து குரான் வாசிக்கலாமா?'' என்றார் ஒமர். 28 ஆண்டுகள் கழித்து தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டியணைத்து அன்பைப் பறிமாறிக் கொண்டனர்.

இதுதொடர்பாகப் பேசும் ஒமர், ''எந்தப் பிரச்சினை என்றாலும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள். ஒரு நாள் எல்லாமே மாறும். உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். இதற்கு என் அம்மாவே வாழும் ஆதாரம்தான்.

மருத்துவர்களும் எத்தனையோ பேரும் சொன்னபோதிலும் எனது இதயத்துக்கு என் தாய் குணமாவார் என்று தெரிந்திருந்தது. அதைப் பரிபூரணமாக நம்பினேன்'' என்று புன்னகைக்கிறார் ஒமர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close