[X] Close

இலங்கை தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையத்தில் நிதி திரட்டும் கனடா சிறுமி


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 17:59 pm
  • அ+ அ-

இலங்கை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வாழும் சிறுமி இணையத்தில் நிதி திரட்டி வருகிறார்.

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டுவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைக்கூட நிம்மதியாக வாழமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக கனடாவுக்குப் புலம்பெயர்ந்த சிறுமி ஒருவர் நிதி திரட்டி வருவது எல்லோரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரசாந்தி ரஜனிகாந்த் என்பவர், 2008-ல் கனடாவுக்குப் புலம்பெயந்தார். 17 வயதான இவர் ஆல்பெர்ட்டாவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.கோஃபண்ட்மீ (gofundme) என்னும் இணையதளம் மூலம் நிதி திரட்டி வருகிறார் பிரசாந்தி.

இதுகுறித்து,  ’’இலங்கை என்னுடைய தாய்நாடு என்பதால் மட்டும் நான் நிதி உதவி செய்ய நினைக்கவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல்  உலகளாவிய அளவில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை உயிர்களை இழந்த பின்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை.

38663034_1556165861214405_r.jpg 

30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் போராட்டமும் இனப்படுகொலையின் சோகமும் இன்னும் இருக்கிறது. ஆனாலும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் இப்போது நடந்த தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன்மூலம் இலங்கையைக் காப்பாற்றுங்கள்.

இங்கு திரட்டப்படும் தொகை அனைத்தும் அசிரி மருத்துவமனை மற்றும் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்காகவும் அவர்களின் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

1000 டாலர்கள் என்ற இலக்குடன் நிதி திரட்டலை ஆரம்பித்தவருக்கு இதுவரை 836 டாலர்கள் (சுமார் ரூ.58 ஆயிரம்) கிடைத்திருக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close