[X] Close

இலங்கை காவல்துறை தலைவர் நீக்கம்


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 15:03 pm
  • அ+ அ-

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக  அந்நாட்டு காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359  என்று கூறப்பட்டு வந்த நிலையில் பலி எண்ணிக்கை  253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

காவல்துறை தலைவர் ஜெய சுந்தராவை தொடர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொண்டு  ராஜினாமா செய்யும்படி  இலங்கை அதிபர் சிறிசேனா புதன்கிழமை வலியுறுத்தினார்.

ஆனால் இதனை ஜெயசுந்தரா மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு இலங்கை காவல்துறை தலைவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close