[X] Close

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ்


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 07:34 am
  • அ+ அ-

இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரக அரசு பிறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாடுகளில் இருந்து அங்கு வந்து வசிப்பவர்களுக்கு தனி திருமணச் சட்டம் உள்ளது. அதன்படி, முஸ்லிம் ஆண் ஒருவர் முஸ்லிம் அல்லாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால், ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆணை திருமணம் செய்து கொள்வதை அந்நாட்டு சட்டம் ஏற்காது. இந்நிலையில், சார்ஜாவைச் சேர்ந்த இந்தியரான கிரண் பாபு என்பவர் 2016-ம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த சனம் சாபு சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அமீரகத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், கிரண் பாபு இந்து என்பதால் பிறப்புச் சான்றிதழ் தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து கிரண் பாபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நான்கு மாதங்கள் நடந்த விசாரணையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மக்களுக்கிடையே நட்புறவை பலப்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டை சகிப்புத் தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி தன் மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு கிரண் பாபு மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இம்முறை அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு கிரண் பாபுவின் பெண் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்து ஆணுக் கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவது ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இது போன்று பிறக்கும் குழந்தை களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க அந்நாட்டு தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளுக்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு முன்னுதாரணமாக அமையும் என்று அமீரகத்தின் இந்திய தூதரக அதிகாரி ராஜமுருகன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close