[X] Close

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தபோது மனித குண்டுகளை வெடிக்கச் செய்தனர்; இலங்கையில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் பலி: ஜெனரேட்டர், பேட்டரிகள், டிரோன் கேமரா, ஜெலட்டின் குச்சிகள், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்


15

  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 07:44 am
  • அ+ அ-

இலங்கையில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தற்கொலைப்படை தீவிர வாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 6 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் உட்பட 15 பேர் உயி ரிழந்தனர். இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் பண்டிகை தினத்தில் பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள் ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்புக் கும், இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது விசாரணை யில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக நாடு முழுவதும் தீவிரவாதி களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. நேற்று வரை 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை அருகே சாய்ந்த மருது பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்றுமுன்தினம் இரவு தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீ ஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை அதிரடிப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் வீட்டின் உள்ளே மறைந்து இருந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இலங்கை போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டை நடந்து கொண்டிருந்த போதே வீட்டினுள் திடீரென வெடிகுண்டு கள் பயங்கரமாக வெடித்து சிதறின. அதி ரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியா மல், உள்ளே இருந்தவர்கள் வெடிகுண்டு களை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரி கிறது. இந்த சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்த 3 தற்கொலைப் படை தீவிரவாதி கள், வீட்டு வளாகத்தில் இருந்த 3 தீவிர வாதிகள், 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 15 பேர் இறந்தனர்.

வீட்டுக்கு வெளியே கண்டெடுக்கப் பட்ட 3 தீவிரவாதிகளின் உடல்கள், பாது காப்புப் படையினர் சுட்டதால் இறந்தவர் கள் என தெரிகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பு, நீர்க்கொழும்பு, சாய்ந்தமருது, கல்முனை, சாவலக்கடே, சாமந்துறை ஆகிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களில் ஒருவர் பலி

துப்பாக்கிச் சண்டை சம்பவம் நடந்த போது அந்த வழியாக சென்ற பொது மக்க ளில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார்.

இந்த கல்முனை பகுதியானது, ஈஸ்டர் தினத் தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப் பின் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிமின் சொந்த ஊர் என்பது தெரியவந்துள்ளது.

சாமந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட் டில் ஏராளமான ஆயுதங்கள், ஜெனரேட்டர், பேட்டரிகள், டிரோன் கேமரா, டெட்டனேட் டர்கள், ஜெலட்டின் குச்சிகள், ஆசிட் பாட்டில்கள், டெட்டனேட்டர் கார்டுகள், தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

கொழும்பில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியபோது அணிந்த உடைகள், அவர்கள் வைத்திருந்த கொடி போலவே, நேற்று குண்டுவெடிப்பு நடந்த பகுதியிலிருந்தும் ஒரு வீட்டில் ஐஎஸ் தீவிரவாத கொடி, அவர்கள் அணியும் உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரண மாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் நடைபெறவிருந்த அனைத்து திருச்சபை நிகழ்ச்சிகள், பிரார்த்தனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

இதையடுத்து அனைத்து தேவால யங்கள், மசூதிகளுக்கு அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் போலீஸாருக்கு உதவ ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் களமிறங்கியுள்ளனர்.

தொடர்ந்து தேடுதல் வேட்டை

இந்நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மர்ம வேன்

இதனிடையே தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாஷி மின்உறவினர் நியாஸுக்குச் சொந்தமான மர்ம வேன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close