[X] Close

‘சூப்பர் கிளி’யைப் பிடித்துச் சிறையில் அடைத்த பிரேசில் போலீஸார்: கிளி செய்த குற்றம்தான் என்ன?


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 17:57 pm
  • அ+ அ-

வடக்கு பிரேசிலில் கிளி ஒன்றைப் பிடித்து போலீஸார் சிறையில் அடைத்த விநோத சம்பவம் நடந்துள்ளது. போதை மருந்து வியாபாரிகளுக்கு வலை விரித்த பிரேசில் போலீஸார் இந்த விநோதக்கிளியின் செய்கையைப் பார்த்து அதிசயித்ததுடன் அதிர்ச்சியும் அடைந்தனர்.

பிரேசில் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி என்னவெனில், வடக்கு பிரேசிலின் பியாயுயி மாகாணத்தின் விலா இர்மா டுல்சி என்ற இடத்தில் வாழும் ஒரு சமூகத்தினர் போதை மருந்து வலைப்பின்னலின் அங்கமாவார்கள். இவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். இவர்களை ஒவ்வொரு முறை பிடிக்கப் போகும் போதும் இவர்கள் போலீஸாருக்கு டிமிக்கி கொடுப்பது வழக்கமாக இருந்தது.

எப்படி இவர்களுக்கு போலீஸ் ரெய்டு குறித்த தகவல் கிடைக்கிறது, யார் கொடுக்கிறார்கள் என்று போலீஸாருக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் இந்த ‘சூப்பர் கிளி’ விவகாரம் தெரியவந்தது. அதாவது போலீசார் வந்தால் உடனே இந்தக் கிளி ‘போலீஸ் போலீஸ்’ என்று கத்தி சிக்னல் கொடுக்குமாறு அவர்கள் கிளியை பழக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் தம்பதியினர் போதை மருந்து விற்று வருவது தெரியவர அந்த இடத்துக்கு வந்த போலீஸார் முதலில் இந்தக் கிளியைக் கைப்பற்றினர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறிய போது, “போலீசார் அருகில் வரும் போது இது போலீஸ் போலீஸ் என்று எச்சரிக்கும்” என்றார்.

பிரேசில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட இந்தக் கிளியைப் பார்த்து விட்டு வந்து, “மிகவும் கீழ்படியும் ஒரு கிளியாகும் இது. கைது ஆனவுடன் தன் வாயை இறுக மூடிக்கொண்டது, இதுவரை ஒரு சப்தம் கூட அதனிடமிருந்து வரவில்லை, ஆழ் மவுனத்தில் இருக்கிறது, சரியான ட்ரெய்னிங்” என்று விதந்தோதினார்.

இந்தக் கிளியை வைத்து தகவல் பெறலாம் என்ற விசாரணை போலீஸாருக்கு பெருத்த ஏமாற்றமே எஞ்சியது, கிளி இன்று வரை வாயைத் திறக்கவில்லை.

இந்தக் கிளியை இதனையடுத்து உள்ளூர் விலங்கு காட்சி சாலையில் விட்டு அங்கு பறக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டவுடன் ரிலீஸ் செய்யப்படும் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.

பிரேசிலில் ரவுடி கேங்குகள் அதிகம், போதை மருந்து கேங்குகள் அதிகம்.. இங்கெல்லாம் இவர்கள் மிருகங்களை வளர்ப்பது சகஜம், 2008-ல் தலைநகர் ரியோ டி ஜெனிரியோவில் இரண்டு சிறு முதலைகளை வளர்த்த கேங் ஒன்றினை போலீஸார் சுற்றி வளைத்தனர். இவர்கள் விரோதிகளைக் கொன்று அந்த மாமிசத்தை முதலைகளுக்கு போட்டதாக வதந்திகள் உண்டு. ஆனால் முதலைகள் அதைச் சாப்பிட மறுத்ததாக எதிர் வதந்திகளும் உண்டு. 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close