[X] Close

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய நபர் ஐஹ்ரான் ஹாஷிம்: சிறிசேனா


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 14:40 pm
  • அ+ அ-

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் ஜஹ்ரான் ஹாஷிம் முக்கிய நபராகச் செயல்பட்டார் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359  என்று கூறப்பட்டு வந்த நிலையில் பலி எண்ணிக்கை  253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தவ்ஹீத்  ஜமாத்தின் தலைவர்  ஜஹ்ரான் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானார் என்று இன்று (வெள்ளிக்கிழமை) கூறப்பட்டது.

இதுகுறித்து சிறிசேனா கூறும்போது,  ''தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானார் என்று புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் ஜஹ்ரான் முக்கிய நபராக இருந்தார் என்று நம்பப்படுகிறது. இத்தகவல் குண்டுவெடிப்பின் போது சிசிடிவி கேமராவிலிருந்து பதிவான காட்சிகளின் அடிப்படையில் இலங்கை ராணுவம் தரப்பில்  கூறப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும், ஐவ்ஹானி ஊரில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அவரது தீவிரவாதக் கருத்துகளை முன்னரே புகார் செய்ததாக தெரிவித்துள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close