[X] Close

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்; தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு: தகவல் தெரிவிக்க இலங்கை அரசு வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 07:32 am
  • அ+ அ-

இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர் புடையதாக சந்தேகப்படும் 6 தீவிர வாதிகளின் புகைப்படங்களை அந் நாட்டு போலீஸார் வெளியிட்டுள் ளனர். இவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித் தன. இதில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 இந்தியர்கள் உட்பட வெளி நாட்டினரும் அடக்கம். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகும் பல்வேறு இடங்களில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக் கணக்கான போலீஸாரும் ராணுவ வீரர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பலருக்கு உள்ளூர் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரம் இந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிர வாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இந்திய உளவுத் துறை முன்கூட் டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அதை கவனத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்த தகவலை அதிபருக்கும் தெரிவிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், இலங்கை யில் கடந்த 23-ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 24-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டது. சந்தேகத்துக்கிட மான இடங்களில் சோதனை நடத் துவது, சந்தேகப்படும் நபர்களை கைது செய்து விசாரிப்பது, தேவைப்பட்டால் சில இடங்களில் சாலை போக்குவரத்தை நிறுத்தி சோதனையிடுவதற்கு இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

srilanka.JPG 

இந்திய உளவுத் துறையின் எச்ச ரிக்கையை அலட்சியப்படுத்திய காரணத்துக்காக, காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்பு அமைச்சக செய லாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அதிபர் கேட்டுக்கொண்டார். இதன்பேரில், ஹேமசிறி பெர் னாண்டோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கொழும்பு நகருக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள புகோடா நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு பின்புறம் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் நேற்று சிறிய அளவிலான ஒரு குண்டு வெடித்தது. எனினும், எவ்வித பாதிப்பும் இல்லை.

உளவு விமானங்களுக்கு தடை

பாதுகாப்பு காரணங்களுக்காக, இலங்கை வான்பகுதியில் உளவு விமானங்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதித்து அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை நேற்று உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

தொழிலதிபர் கைது

ஷாங்ரி-லா மற்றும் சின்னமான் கிராண்ட் ஓட்டல்களில் குண்டுகளை வெடிக்க வைத்ததாக சந்தேகப்படும் இல்ஹாம் அகமது இப்ராஹிம் மற்றும் இம்சத் அகமது இப்ராஹிம் சகோதரர்களின் தந்தை தொழிலதிபர் முகமது யூசுப் இப்ராஹிம் என தெரியவந்தது. தாக்குதல் நடத்துவதற்காக தனது மகன்களுக்கு உதவி செய்ததாகக் கூறி யூசுப்பை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

மேலும் இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முகமது இவுஹயிம் சாதிக் அப்துல் ஹக், பாத்திமா லதீபா, முகமது இவுஹயிம் சாஹித் அப்துல் ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் (எ) சாரா, அப்துல் காதர் பாத்திமா காதியா மற்றும் முகமது காசிம் முமது ரில்வான் ஆகிய 6 பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர். இந்த நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, கத்தோலிக்க தேவாலயங்கள் மூடப்படுவதுடன் அனைத்து பொது சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்

கொழும்பு நகரில் உள்ள அதிபரின் செயலகத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசும் போது, “வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக 139 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்து வதற்காக பாதுகாப்பு அமைச்சகத் துக்குள் ஒருங்கிணைந்த செயல் மையம் அமைக்கப்படும்” என்றார்.

வருகை விசா நிறுத்தம்

இலங்கைக்கு வரும் 39 வெளிநாடுகளைச் சேர்ந்த சுற் றுலாப் பயணிகளுக்கு, அங்கு வந்தவுடன் விசா வழங்கும் நடை முறை உள்ளது. குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக இந்த நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்க நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close