[X] Close

மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் பீதி: கொழும்புவில் உச்சபட்ச எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 17:57 pm
  • அ+ அ-

இலங்கையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து, தலைநகர் கொழும்புவில் உச்சபட்ச எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

 

இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஐத் தொட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து வெளியான தகவலின்படி, சாலைகளில் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பயணிகளையும் வாகனங்களையும் பரிசோதித்து வருகின்றனர். குடிமக்களை அமைதி காக்கவும் விழிப்புடன் இருக்கவும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

 

இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஊழியர்கள் தங்களுடைய பணியிடத்தைவிட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

 

முன்னதாக இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கையின் தலைநகர் கொழும்பு அருகே 40 கி.மீ. தொலைவில் புகோடா பகுதியில் குண்டுவெடித்தது. இங்குள்ள மேஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குப் பின்னால் உள்ள காலி நிலத்தில் குண்டு வெடித்தது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தலைநகர் கொழும்புவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close