[X] Close

இந்தியா, சீனா, திபெத் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கம்


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 12:22 pm
  • அ+ அ-

-பிடிஐ

இந்தியா, சீனா, திபெத் எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் இந்திய எல்லை அருகே இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3. ரிக்டரில் சக்திவாய்ந்ததாக இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் அருணாச்சலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகரிலிருந்து தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு 40 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக அமெரிக்க ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்தது.

அடுத்ததாக ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து சீன பூகம்ப தொடர்பு மையம் கூறுகையில், ''இந்தியாவுக்கு மிக அருகே சீனாவின் தொலைதூர கிராமங்களில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலந்டுக்கம் ஏற்பட்டது. சீனாவின் மெடாக் மாவட்டத்தில் நியீங்ச்சி நகரத்தில்  இன்று அதிகாலை 4.30 மணியளவில் 6.30 ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இப்பகுதி இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லைக்கு அருகே ஏற்ப்பட்ட இந்நிலநடுக்கம் 28.40 டிகிரி வடக்கு அட்சரேகை 94.61 டிகிரி கிழக்கு அட்சரேயில் 10 கி.மீ.ஆழத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை'' என்று தெரிவித்தது.

திபெத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அரசு நடத்திய சின்குவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

திபெத் பீடபூமியில் மிகப்பெரிய பூகம்பங்களுக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இங்குதான் டெக்டோனிக் யூரோசியன் மற்றும் இந்திய தட்டுகள் சந்திக்கும் இடமாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close