[X] Close

கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு


87

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 18:30 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

 

இலங்கையின் கொழும்பு பகுதியின் வெவ்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து நடைபெற்ற சோதனையில், கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தகவலை அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

 

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.

 

இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் 12 டெட்டனேட்டர்கள் (வெடிகுண்டு குச்சிகள்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த சோதனையில் மேலும் 75 டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தகவலை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close