[X] Close

மைத்ரிபால சிறிசேனாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை: உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 08:18 am
  • அ+ அ-

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற காட்டுமிராண்டி தனமான செயலுக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் சிறிசேனாவிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தாக்குதல் குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கையில் நிகழ்ந்த கொடூரமான வெடிகுண்டுதாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு நமது பிராந்தியத்தில் இடம் இல்லை. இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்திய தூதரகத்தை அவ்வப்போது தொடர்பு கொண்டு தகவலை கேட்டறிந்து வருகிறோம். உதவி தேவைப்படும் இந்தியர்கள் +94777903082, +94112422788 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்” என பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close