[X] Close

இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு: நடந்தது என்ன?- நேரில் பார்த்த பாதிரியார் அதிர்ச்சிப் பேட்டி


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 17:04 pm
  • அ+ அ-

-பிடிஐ

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகைக்காக பிரார்த்தனை செய்ய தேவாலயம் வந்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இன்று காலை நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயம், கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆகிய சர்ச்களிலும் நாட்டின் முக்கிய மூன்று நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஈஸ்டர் ஞாயிறுக்காக வெளிநாட்டினரும் வந்து ஓட்டல்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செபாஸ்டியன் தேவோலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கியவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 113 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு துயர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து கத்தோலிக்க கார்டினல் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புனித செபாஸ்டியன் தேவாலய தலைமை பாதிரியார் சிஎன்என்னில் தெரிவித்தது:

மேற்கு கடற்கரை நகரான நீர்கொழும்புவில் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடித்தபோது, இன்று ஈஸ்டர் ஞாயிறு பிரார்த்தனைக்கு திரண்டிருந்த மக்கள் உடல்கள் சிதறி தேவாலயத்தில் சுவர்கள் எங்கும் வெளியே கூட துண்டுதுண்டாக சிதறி தூக்கியெறிப்பட்டனர்.

edmand.jpg 

கொழும்பு பேராயரின் ஊடகத் தொடர்பு இயக்குநர் ஃபாதர் எட்மண்ட் திலகரத்னே சிஎன்என்க்கு அளித்த நேர்காணல்:

ஈஸ்டர் பிரார்த்தனைக்குப் பிறகு நடந்த இக்குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 30 உடல்கள் தேவாலயப் பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்பு சமயத்தில் மூன்று பாதிரியார்கள் அங்கிருந்தனர். அவர்களில் இருவர் மீது பறந்து வந்த கண்ணாடிகள் மற்றும் சிதறல்கள் வந்து தாக்கியதில் கடுமையான காயமடைந்தனர். இன்னொரு பாதிரியார் பலிபீடத்திற்கு பின்புறம் இருந்ததால் சிறு காயத்தோடு தப்பித்தார்.

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று மதிப்பிட்டிருந்தோம். ஏனெனில் இன்று சிறப்புமிக்க நாள் என்பதால். நிறைய பேர் கிராமத்திலிருந்து வந்திருந்தார்கள்.

ரத்தக் கறைகளாலும் சிதைந்த கண்ணாடித் துண்டுகளாலும் தேவாலயத் தரைப்பகுதி நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி குண்டுவெடிப்பில் பரிசுத்த ஆலயத்தின் சுவர்கள் மீது வீசியெறியப்பட்ட சதைத் துண்டுகளையும் நீங்கள் பார்க்கமுடியும்.

இத் தேவாலயம் 1946ல் கட்டப்பட்டது. புனித செபாஸ்டியன் பெயரில் விளங்கும் பல தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். செயிண்ட் செபாஸ்டியன் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் ஒரு தியாகியாக கருதப்படுபவர்.

ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்கூட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் மீது இலங்கை அரசு கருணைகாட்டாமல் தண்டனை வழங்க வேண்டும் என்று கொழும்பு பேராயர் கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை கத்தோலிக்க கார்டினல் அறிக்கை

இலங்கை கத்தோலிக்க சர்ச்சிகளின் கார்டினல் மால்கம் ரஞ்சித், ''ஒரு மிகவும் பாரபட்சமற்ற வலுவான ஒரு விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும், மேலும் இரக்கமுறையில் விலங்குகள் மட்டுமே ஈடுபடும் இத்தகைய இரக்கமுறையிலான செயலுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொழும்பு மறை மாவட்டத்தின் அனைத்து பிரார்த்தனைக் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக கார்டினல் அறிவித்துள்ளார்.

ஷாங்ரி லா ஹோட்டல் அறிக்கை

இலங்கையில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் ஒன்றான கொழும்புவின் ஷாங்ரி லா ஹோட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இச்சம்பவத்தில் நாங்கள் மனதளவில் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். என்று தெரிவித்துள்ளது.

இக்குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட எங்கள் ஹோட்டலின் ஊழியர்களுக்கும் தங்கியிருந்த விருந்தினர்களுக்கும் உதவிபுரிய அவசர உதவிக் குழுக்கள் மற்றும்

உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்.

இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதிலும் அவர்களது அனைத்து நலனுக்காகவும் நாங்கள் உடனடி முன்னுரிமை அளித்துவருகிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஷாங்கிரி லா நெருக்கடி மேலாண்மைக் குழு இதில் ஈடுபட்டுள்ளது.

தீவிர விசாரணை நடைபெற்றுவருவதால் தற்போது வேறு கருத்தையும் நாங்கள் சொல்லும் நிலைமையில் இல்லை. மேலும் வேறு தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அப்போது மேலதிக தகவல்களை நாங்கள் வழங்குவோம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close