[X] Close
 

அவெஞ்சர்ஸ் வில்லன் தானோஸ் ’கைது’ : கிண்டல் செய்த நெட்டிசன்கள்


avengers-infinity-war-villain-thanos-arrested-by-police

  • kamadenu
  • Posted: 14 May, 2018 17:42 pm
  • அ+ அ-

அவெஞ்சர்ஸ் வில்லன் தானோஸை போலீஸார்  கைது செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சமீபத்தில் வெளியான ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் வசூலை குவித்தது. இந்தப் படத்தின் இறுதி பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படத்தின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் இளைஞர்களிடமும், சிறுவர்களிடமும் அதிக அளவில் ரசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து அப்படத்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவெஞ்சர்ஸ் கதாநாயகர்களின் கதாபாத்திரங்கள் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளதோ அதே அளவில் அப்படத்தின் வில்லன் கதாபாத்திரமான தானோஸும் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

அதற்கு சுவாரசியமான உதாரணம் சமீபத்தில் நடந்துள்ளது. 

தானோஸ் வேடம் அணிந்த ஒருவரை கனடா போலீஸார் கைது செய்யும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. கைது குறித்த விவரத்தை கனடா போலீஸார் வெளியிடும் முன்னரே அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில்  நகைச்சுவையாக பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு நமது நெட்டிசன்கள் மீம்ஸ்கள் வெளியிடவும் தவறவில்லை.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close