[X] Close

நவீன நிகழ்ச்சிகளுடன் ‘டிவி சேனல்’ - அடுத்த மாற்றத்திற்கு தயாராகும் சவுதி அரேபியா


new-saudi-tv-station-feeds-into-modernisation-drive

  • நெல்லை ஜனா
  • Posted: 13 May, 2018 13:57 pm
  • அ+ அ-

சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து லாரி, பைக் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இந்த நடைமுறையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இதுபோலவே திரைப்படங்கள் பார்க்க சவுதி அரசு அனுமதி மறுத்து வந்தது. சினிமா உள்ளிட்ட பொழுது போக்குகளுக்கும் அனுமதி அளித்து வருகிறது. புதிய படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து அந்நாட்டில் மக்களின் பொழுது போக்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் டிவி சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி, பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இந்த டிவிசேனல்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ‘எஸ்பிசி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி சேனலில் திரைப்படங்கள், விவாத நிகழ்ச்சிகள்,பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளது.

இதுகுறித்து புதிய டிவி சேனலில் இயக்குனர் தாவூத் கூறுகையில் ‘‘இளம் வயதினரை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக 15 முதல் 35 வயது கொண்டவர்கள் எங்களின் பார்வையாளர்களாக இருப்பார்கள். இதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் கலாச்சார பெருமையை கூறும் நிகழ்ச்சிகளையும் தயாரிப்போம்’’ எனக்கூறினார். இந்த அரசு டிவி சேனல் விரைவில் விரிவான ஒளிபரப்பை தொடங்குகிறது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close