[X] Close
 

அன்னையர் தினத்தை டூடுல் போட்டு கொண்டாடும் கூகுள்


google-doodle-celebrates-mothers-day-with-a-dinosaur-doodle

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 May, 2018 11:53 am
  • அ+ அ-

இன்று (13.05.2018) சர்வதேச அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தை ஒட்டி கூகுள் தேடுபொறி இயந்திரத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் ஒரு தாய் டைனோசர் அருகே தனது குட்டியை அழைத்துச் செல்வதுபோல் இருக்கிறது.

தாய் என்பவள் குழந்தைகளுக்கு நலனுக்கு தன்னலமற்ற அன்பைச் செலுத்தி பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத உயர்ந்த உள்ளம் படைத்தவள். அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு இந்த தினம் சமர்ப்பிக்கப்படுகிறது.

மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடும் பழக்கம் அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைப் பின்பற்றி உலகளவில் பல்வேறு நாடுகளும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறது. 40 நாடுகள் இதனைப் பின்பற்றுகிறது.

அன்னா ஜார்விஸை தெரிந்து கொள்வோம்..

முதன் முதலில் 108-ல் தான் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண் தனது தாயின் நினைவாக புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் நினைவிடம் அமைத்தார். அன்னாவின் தாயார் ஒரு அமைதித் தூதவர். மக்கள் மத்தியில் அமைதியை விதைக்கும் ஆர்வலராக இருந்தார். அதன் காரணமாகவே தனது அன்னையின் சிறப்பான பணியை நினைவு கூரும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஜார்விஸ் விரும்பினார். அன்னாவும் அமெரிக்கன் சிவில் போரில் காயமடைந்த வீரர்களுக்கு உதவி வந்தார். 
அன்னை என்பவர் இந்த உலகத்தில் யாரும் செய்ய முடியாத நன்மையை ஒரு குழந்தைக்கு செய்யக்கூடியவர் என்பதை ஆழமாக நம்பினார் அன்னா.

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close