[X] Close

சர்வதேச விண்வெளி மையத்தில் ‘பிஹு’ நடனம் ஆடும் நாசா வீரர் சமூக வலைதளங்களில் வைரல்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:31 am
  • அ+ அ-

விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா வீரர் ஒருவர் அசாமின் பாரம்பரிய ‘பிஹு’ நடனம் ஆடுவது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தமிழர்களைப் போலவே அசாமியர்களுக்கும் ஏப்ரல் 14-ம் தேதிதான் புதுவருடப் பிறப்பு ஆகும். அசாமில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் ரோங்காலி ‘பிஹு’ என்ற பாரம்பரிய திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அனுபம் போர்தோலி என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் மேற்கண்ட வைரல் வீடியோவை வெளியிட்டு இந்த ஆண்டு ரோங்காலி ‘பிஹு’ கொண்டாடியுள்ளார்.

அவர் இந்த வீடியோவுடன் கொடுத்துள்ள விளக்கத்தில், ஆடல் பாடல் இல்லாத ‘பிஹு’வா? கடந்த 2004-ல் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா வீரர் மைக் பின்க்கி, ‘பிஹு’ நடனம் ஆடுவதைப் பாருங்கள். இவர் அசாமின் மருமகன். இவரது மனைவி ரெனிதா சைக்கியாவும் நாசாவில் பணிபுரிகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் ஒருவர் நடனம் ஆடுவதாக நாம் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். இந்நிலையில் மைக்கின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close