[X] Close

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மிதமான நிலநடுக்கம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 15:24 pm
  • அ+ அ-

அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ''அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியின் மேற்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப்  பதிவாகியுள்ளது.

இதன்  ஆழம் 16 கிலோ மீட்டர் ஆகும். 900க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. எனினும் இந்த நிலநடுக்த்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

சமீபநாட்களாக ஹவாய் தீவுகளில்  தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து எரிமலைச் சீற்றமும் ஏற்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close