[X] Close

ஃபேஸ்புக் சிஇஓ பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ரூ.136 கோடி செலவு


136

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 07:17 am
  • அ+ அ-

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ரூ.136 கோடி (2 கோடி டாலர்) செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக் ஈடுபட்டது மற்றும் பயனாளிகள் தகவலை தவறாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக ஜூகர்பெர்க்கிற்கு 2018-ம் ஆண்டில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக, அவருக்கு செலவிட்ட பாதுகாப்பு தொகையும் அதிகரித்துள்ளது.

2016-ம் ஆண்டில் ஜூகர்பெர்க் வருமானமாக பெற்ற தொகையைக் காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகமாகும்.

அமெரிக்க பங்குச் சந்தை அமைப்புக்கு அளித்த தகவலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தனியார் விமானத்துக்கு 26 லட்சம் டாலர் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது 15 லட்சமாக இருந்தது. ஜூகர்பெர்க் ஆண்டுக்கு ஒரு டாலரை மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை 2.21 கோடி டாலராகும்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close