[X] Close

ஈரான் விவகாரம்: ட்ரம்ப் - முகமது சல்மான் ஆலோசனை


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 16:05 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் ஈரான் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் ஈரானில் நிலவும்  மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசியுள்ளனர். அதுமட்டுமில்லாது மத்திய கிழக்கு நாடுகளில் சவுதியின் ஸ்திரத்தன்மை மற்றும் ஈரான் மீது கொடுக்கக் கூடிய அழுத்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று குறிப்பிட்டார். இதற்கு அமெரிக்க ராணுவ முகாம்கள், ராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஈரான் பதிலடி அளித்தது.

இந்த நிலையில்அமெரிக்க அதிபர் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இடையே இந்த உரையாடல் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close