[X] Close

காதலன் திருமணத்துக்கு திருமண ஆடையுடன் வந்த முன்னாள் காதலி: வைரலாகும் வீடியோ


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 13:54 pm
  • அ+ அ-

சீனாவில்  காதலன் திருமணத்துக்கு திருமண ஆடையுடன் முன்னாள் காதலி வந்திருந்த வீடியோ ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "இளம்பெண் ஒருவர் (பெயர் குறுப்பிடப்படவில்லை) திருமண ஆடையுடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்கிறார். அவர் மணமக்களின் அருகில் சென்று மணமகனின் கைகளை பிடித்து கொள்கிறார்.

அவரை பார்த்ததும் அந்த மணமகன் கையை உதறி தள்ளி விடுவார். உடனே  அவரது கால்களை பிடித்து என் மீதுதான் தவறு என்று கூறுகிறார். உடனே மணப்பென் கோபமாக அங்கிருந்து செல்கிறார். மணமகனும் அவரது முன்னால் காதலியை விட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறார்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சீன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close