[X] Close
 

ஒரு வெளிநாட்டு பிரதமருக்கு இப்படியா விருந்து கொடுப்பது?- இஸ்ரேல் தந்த அதிர்ச்சி


netanyahu-puts-wrong-foot-forward-by-serving-japan-s-abe-dessert-in-a-shoe

  • kamadenu
  • Posted: 08 May, 2018 16:07 pm
  • அ+ அ-

அண்மையில் இஸ்ரேல் சென்ற ஜப்பான் பிரதமருக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. விருந்தில் அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த இனிப்பு வகை ஒன்று ஷூவுக்குள் வைத்து வழங்கப்பட்டதே இதற்குக் காரணம்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அவரது மனைவி அகி அபேவும் கடந்த வாரம் இஸ்ரேல் சென்றிருந்தனர். இஸ்ரேல் பிரதமருடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ இல்லத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த விருந்து நிகழ்ச்சியில், பளபளவென தோற்றமளித்த சாக்கலேட் ஷூ ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த ஷூ உலோகத்தால் ஆனது. அதனுள் இனிப்பு வகை இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் பிரபல சமையல் கலைஞர் செகேவ் மோஷே தயாரித்திருந்தார். புகைப்படத்தை பெருமிதத்துடன் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்திருந்தார்.

இது குறித்து இஸ்ரேல் செய்தித்தாள் ஒன்று, "இது ஓர் உணர்வற்ற முடிவு. ஜப்பானியர்கள் கலாச்சாரத்தில் காலணி மிகவும் கீழ்த்தரமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் அவர்கள் ஷீ அணிவதில்லை. அதேபோல் அலுவலகத்திலும் அவர்கள் ஷூ அணிவதில்லை. அந்த வகையில் இது ஜப்பான் நாட்டின் பிரதமருக்கு செய்யப்பட்ட அவமரியாதை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, "உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஷூவை உணவு மேஜையில் வைக்கும் கலாச்சாரம் இல்லை. இஸ்ரேல் சமையல் நிபுணர் என்ன நினைத்து இதை மேஜையில் வைத்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர் அதனை வேடிக்கை என நினைத்திருந்தால் அது எங்களை எந்தவிதத்திலும் மகிழ்ச்சியடையச் செய்யவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், எங்கள் பிரதமர் சார்பில் நாங்கள் வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close