[X] Close
 

எல்லா கோட்டையும் அழி; மறுபடியும் மொதலேந்து...


hundreds-of-uk-doctors-have-job-offers

  • நெல்லை ஜனா
  • Posted: 06 May, 2018 19:45 pm
  • அ+ அ-

இங்கிலாந்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் 1500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். மருத்துவதுறையின் பல்வேறு பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட இவர்கள் எழுத்துத்தேர்வு,  நேர்முகத்தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட்டனர்.

வேலை கிடைத்த 1,500 பேரும் தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட ஊர்களுக்கு சென்று பணியில் சேர்ந்தனர். சொந்த ஊரை விட்டு, புதிய ஊரில் வீடு பார்த்து குடியேறினர். தங்கள் குழந்தைகளையும் அங்குள்ள பள்ளியில் சேர்த்தனர்.

இந்நிலையில், உங்களுக்கு வழங்கப்பட்ட வேலை தவறுதலாக வழங்கப்பட்டு விட்டது, அதனால் நீங்கள் வேலையிழக்கிறீர்கள் என இங்கிலாந்து மருத்துவ துறையில் இருந்து இவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை பார்த்த அவர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். உடனடியாக மருத்துவத்துறையை தொடர்பு கொண்டு கேட்டனர்.

அப்போது, ஆட்கள் தேர்வு செய்யும்போது, கம்ப்யூட்டர் குளறுபடி காரணமாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகமாக பதிவாகியுள்ளது. எனவே இந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தனர். மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மருத்துவர்கள் மருத்துவத்துறைக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என பிரிட்டன் மருத்துவ துறை தெரிவித்துள்ளது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close