[X] Close

மீண்டும் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரலை நசுக்கும் சவுதி


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 17:48 pm
  • அ+ அ-

இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 10 சமூகச் செயற்பாட்டாளர்களை சவுதி அரேபியா கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சவுதி அரசை விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது சல்மான் இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி மறுத்தது. இந்தக் கொலை காரணமாக சவுதி செல்வாக்கு சரிந்ததாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சமூகச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்திருக்கிறது சவுதி அரசு.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''ஜமாலின் மரணத்துக்கு பிறகு மீண்டும் தனிப்பட்ட நபர்கள் மீது சவுதி அரசு தாக்குதலை நடத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள். இவர்கள்  பெண்களின் உரிமைக்காவும், சமூக முன்னேற்றதுக்காகவும் குரல் கொடுத்ததற்காக சிறை தண்டனை பெற்றவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வந்ததற்கு கடந்த ஆண்டு பாராட்டப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது சவுதி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close