[X] Close
 

பேஸ்புக்கில் ட்ரம்ப்பை விட மோடி 2 மடங்கு பிரபலம்: தகவல் நிறுவன ஆய்வில் தகவல்


facebook-popularity-modi-beats-trump

  • kamadenu
  • Posted: 03 May, 2018 13:17 pm
  • அ+ அ-

ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரபலமாக இருந்தாலும், பேஸ்புக்கில் அவரை விட பிரதமர் நரேந்திர மோடி 2 மடங்கு அதிக பிரபலமாக விளங்குகிறார் என்று தனியார் தகவல் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘பர்சன் மார்ட்ஸ்டெல்லர்’ என்ற தனியார் தகவல் நிறுவனம் ட்விட்டர், பேஸ்புக் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:
உலக அரசியல் தலைவர்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ட்விட்டரில் மிகப் பிரபலமாக இருக்கிறார்.

ஆனால், பேஸ்புக்கில் அவரை விட இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 மடங்கு அதிக பிரபலமாக உள்ளார். அதிபர் ட்ரம்ப்பை பேஸ்புக்கில் 2.31 கோடி பேர் பின்தொடர்கின்றனர். ஆனால், மோடியை 4.32 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இது ட்ரம்ப்பை விட ஏறக்குறைய 2 மடங்காகும்.

ஆசிய நாடுகளில் ட்விட்டரை விட பேஸ்புக்கைதான் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். மோடி மிக பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். எனினும், பேஸ்புக்கில் மோடியை விட ட்ரம்ப்பை பின்தொடர்வோர் அதிகளவில் கமென்ட், லைக்ஸ் போன்றவற்றைத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதருரை பின்னுக்கு தள்ளியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் 650 பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- ஏஎப்பி



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close