[X] Close

அதிபராக வாய்ப்புள்ள காமெடி நடிகர்: உக்ரைனில் மாறும் தேர்தல் காட்சிகள்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 12:30 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

அரசியலில் எந்த முன்அனுபவமும் இல்லாத காமெடி நடிகர் ஒருவர் உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 30.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

இத்தேர்தலில் அதிபர் பீட்டர் போரோஷென்கோ  17.8 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷென்கோ இத்தேர்லில் போட்டியிட்டு மிகவும் குறைவாக 14.2 சதவீத வாக்குகள் பெற்று டெபாஸிட் இழந்துள்ளார்.இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற உள்ளது.

வொலாடிமிர் ஸெலான்ஸ்கி (41) இவர் ஒரு சினிமா நகைச்சுவை நடிகர். இவருக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம். எனினும் தேர்தல் அரசியலில் அனுபவம் இல்லாதவர். திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை பெற்ற இவர் நாடு தழுவிய மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

இவர் நடிகராக ஆவதற்கு முன்பே ஆரம்ப காலங்களில் உள்ளூரில் நகைச்சுவைக் குழுவை ஒன்றை வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு முதல் படமே இவரது இயல்புக்கேற்ப காமெடி ரொமான்டிக்காக அமைந்தது. 'லியுபோவ் வி போல்ஷம் கோரோட்' (லவ் இன்த பிக் சிட்டி) என்ற உக்ரைன் படம் வெறும் முப்பந்தைந்து லட்சம் டாலரில் எடுத்தது. பாக்ஸ் ஆபீஸில் 91 லட்சம் டாலர்களைக் குவித்தது.

ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர், 2009 தொடங்கி 2015 வரை இதுவரை எட்டு படங்கள், மூன்று டிவி சீரியல்கள்தான் நடித்துள்ளார். ஆனால் உக்ரைன் நாட்டின் பொதுத்தேர்தலையே அசைத்துப் பார்க்கும் மக்கள் ஆதரவு இவருக்குக் கிடைத்துள்ளது.

பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஸெலான்ஸ்கி கூறுகையில், ''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் இது இறுதி நடவடிக்கை அல்ல'' என்றார்.

உக்ரைனில் மூன்றரை கோடி மக்கள் வாக்களிக்கப் போகும் இத்தேர்தலில் 39 பேர் அதிபருக்குப் போட்டியிடுகிறார்கள். இங்கு 30 ஆயிரம் வாக்குப் பதிவு நிலையங்கள் உள்ளன.

முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே இந்நடிகருக்கு ஏறுமுகம் அமைந்ததற்கு, இவரது நையாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சர்வன்ட் ஆப் பீப்பிள்' (2015) ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள். இதில் ஒரு சாதாரண குடிமகன் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பதவிக்கு வந்த பிறகு யதார்த்த வாழ்க்கையில் ஊடுருவியுள்ள ஊழலை எதிர்த்து அவர் எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதை இத்தொலைக்காட்சித் தொடர் சித்தரித்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close