[X] Close

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களுக்கு உதவிய பாகிஸ்தான்


pakistan-delivers-food-medical-aid-to-indian-fishermen-stuck-at-sea

  • இந்து குணசேகர்
  • Posted: 30 Apr, 2018 16:31 pm
  • அ+ அ-

கடலில் மாட்டிக் கொண்ட இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவிய உணர்வுப்பூர்வமான நிகழ்வு நடந்துள்ளது.

மும்பை 26|11 தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானும் நிரந்தர எதிரிகளாகிவிட்டனர். பாகிஸ்தான்  நடிகர்கள் பாலிவுட்டில் நடிக்கத் தடை, ஐபிஎல் போட்டிகளில் அந்நாட்டு வீரர்கள் விளையாடத் தடை என்று பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கும் இடையே பகை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமைதி தூதுவனான ஐக்கிய நாடுகள் சபை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளிலும் இரு நாடுகளும் ஒருவரையிருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டனர்.

இந்த பகைமை தொடர்ந்து நீண்ட பகையாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில்  நடுக்கடலில் சிக்கிக் கொண்ட இந்திய மீனவர்களுக்கு உணவு மருத்து பொருட்கள் அளித்து பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது.

இதுகுறித்து  ’ The Express Tribune’  ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 8  நாட்களுக்கு முன்னர் மோட்டார் பிரச்சினை காரணமாக இந்திய மீனவர்கள் வந்த படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த இந்திய மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் தத்தளித்ததாக செய்தி அறிந்தவுடன் பாகிஸ்தான் கடற்படை விரைந்து வந்து அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி செய்துள்ளது. பாகிஸ்தானியர் நீண்ட நாள் வாழ்க என்று பாகிஸ்தான் கடற்படையினருக்கு இந்திய மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”எங்கள் கடற்படை எப்போதுமே உதவிக்கு முன் நிற்கும். இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம் ”  என்று கூறியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close