[X] Close

நேரம் நல்ல நேரம்.. கடிகாரத்தில் 30 நிமிடங்கள் அதிகரிக்கும் வடகொரியா


north-korea-to-rejoin-south-s-time-zone-in-conciliatory-gesture

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Apr, 2018 20:14 pm
  • அ+ அ-

அணுஆயுத சோதனையை நிறுத்திக் கொள்ளுதல், அமெரிக்க அதிபரை சந்திக்க ஒப்புதல் தெரிவித்தல், தென் கொரியாவுக்கு நேசக்கரம் நீட்டுதல் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எடுத்த அடுத்தடுத்த முடிவுகள் வடகொரியாவுக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டதை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், தென் கொரியாவுடன் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில், "வடகொரியா நாட்டில் இனி நேரத்தை 30 நிமிடங்கள் முன்னால் கூட்டிவைத்து வடகொரியாவின் நேரத்துக்கு இணையான நேரத்தை கடைபிடிக்க கிம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

2015-ம் ஆண்டுக்குப் பின் வடகொரியாவும் தென் கொரியாவும் தனித்தனி டைம் ஜோன்களைப் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில், கிம் தற்போது ஒரே டைம்ஜோனைப் பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு..
கொரியப்போர் 1953-ல் முடிந்த பின்னர் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்த நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர கொரியா உச்சி மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 
அதன்படி, வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரியா சென்று அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பான்முன்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்கத்தில், இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, தென்ெகாரியா அதிபர் மூன்னை வடகொரியா எல்லையில் கால்பதிக்க அழைத்தார் கிம் ஜோங் உன். இருவரும் இணைந்து வடகொரியா எல்லையில் கால் பதித்த பின் மீண்டும் தென் கொரியா எல்லைப் பகுதிக்கு வந்தனர். 1953ம் ஆண்டுக்கு பின் தென்கொரியா சென்ற முதல் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உன் ஆவார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close