[X] Close

பிரிட்டனின் குட்டி இளவரசர் பெயரை ஒட்டகத்துக்கு சூட்டிய வனவிலங்கு காப்பகம்


camel-born-on-the-same-day-named-in-honour-of-royal-baby

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Apr, 2018 14:52 pm
  • அ+ அ-

பிரிட்டனின் குட்டி இளவரசர் லூயிஸ் பிறந்த அதே நாளில் பிறந்த ஒட்டகத்துக்கு வனவிலங்கு காப்பகம் இளவரசரின் பெயரைச் சூட்டியுள்ளது.வ்பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.

மீண்டும் கர்ப்பமாக இருந்த கேட் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. வில்லியம் - கேட் தம்பதி குட்டி இளவரசருடன் மருத்துவமனைக்கு வெளியே வந்து கை அசைத்தனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளவரசர் லூயிஸ் பிறந்த அதே நாளில் சுமாராக அதே நேரத்தில் இங்கிலாந்தின் பிளாக்பூல் வனவிலங்கு காப்பகத்தில் ஒட்டகம் ஒன்று பிறந்துள்ளது. இரண்டு திமில்களை கொண்ட பாக்ட்ரியன் (Bactrian) வகையைச் சேர்ந்த இந்த ஒட்டகக் குட்டிக்கும் லூயிஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனவிலங்கு காப்பகம் தரப்பில், "கேட் மிடில்டன்னுக்கு பிரசவ வலி ஏற்பட்ட அதே நேரத்தில்தான் காப்பகத்திலிருந்த ஒட்டகமும் குட்டியை ஈனத் தொடங்கியது. வில்லியம் - கேட் தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்த தகவல் வெளியான நேரத்தில் ஒட்டகம் அந்தக் குட்டியை ஈன்றது. எனவே, இளவரசர் லூயிஸை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஒட்டகத்தின் புகைப்படத்துடன் வனவிலங்கு காப்பகம் அதிகாரிகள் ட்வீட் செய்துள்ளனர்.  

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close