[X] Close
 

கரையில் முதலை: அதிர்ச்சியடைந்த கோல்ப் வீரர்


golfer-comes-dangerously-close-to-alligator-while-playing-watch

  • இந்து குணசேகர்
  • Posted: 28 Apr, 2018 13:27 pm
  • அ+ அ-

நியூசிலாந்து கோல்ப் வீரர் ஒருவர் கோல்ப் பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது கரையில் முதலை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.


 நியூசிலாந்து கோல்ப் வீரரான டானி லீதான் இந்த அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறார். நியூ ஆர்லன்ஸ் நகரில் வழக்கபோல் கோல்ப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது அவர் தூக்கி அடித்த பந்து வெயில் காலத்துக்கு இதமாக நீர் நிலையத்திலிருந்து வெளியே வந்து படுத்து இருந்த முதலையின் அருகில் விழுந்துள்ளது.


அதனை கண்ட லீ அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.  பின்னர் அவரது சக நண்பரான கோடிகிரிப்பிள் உதவியுடன்  பல போராட்டங்களுக்கு பின்னர் முதலையை நீருக்குள் அனுப்பி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை டானி லீ தனது இன்ஸ்டிரகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், கோடிகிரிப்பிள் நீங்கள் அதை எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை. தங்கள் மீது  நிறைய மரியாதை உருவாகியுள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார்.

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close