[X] Close

மொசாம்பிக் நாட்டில் 192 பேரை மீட்டது இந்திய கடற்படை


192

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 05:22 am
  • அ+ அ-

இந்தியப் பெருங்கடலில் உருவான ‘இடை’ என்ற புயல் கடந்த 15-ம் தேதி மொசாபிக் நாட்டின் பெய்ரா நகரில் கரையை கடந்தது. பின்னர் இப்புயல் அண்டை நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் மலாவி நோக்கி நகர்ந்தது. மணிக்கு 170 கி.மீ. வேகம் வரை வீசிய புயல் காற்று மற்றும் கன மழையால் மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளில் மிகுந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவுமாறு ஜிம்பாப்வே விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு உடனடியாக 3 கடற்டை கப்பல்களை துறைமுக நகரான பெய்ராவுக்கு அனுப்பியது.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மொசம்பிக் நாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியாவின் செடாக் ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணி மேற்கொண்டனர். இந்திய வீரர்கள் இதுவரை 192-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். கடற்படையின் மருத்துவ முகாம்களில் இதுவரை 1,381 பேருக்கு மருத்துவ கிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close