[X] Close

தோனியைப் பாராட்டி ட்வீட் செய்த பாக்., பத்திரிகையாளர்: ட்ரோல் செய்யும் ரசிகர்கள்


pakistani-journalist-applauds-ms-dhoni-gets-trolled-back-home

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Apr, 2018 14:46 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் தோனியைப் பாராட்டி ட்வீட் செய்த பாகிஸ்தான் பத்திரிகையாளரை அந்நாட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனி விளாசிய பந்துகள் அவர் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீகின் தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எம்.எஸ்.தோனி இன்னமும் சிறந்த ஆட்டக்காரர். ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கவல்லவர் என்பதை நிரூபிக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்பு இது" எனப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரை ட்ரால் செய்தனர். 
ஐபிஎல் விளையாட்டில் பாகிஸ்தான் அணி வீரர் ஒருவர்கூட இல்லை ஆனால், நீங்கள் என்னவென்றால் ஒரு இந்திய வீரரைப் பாராட்டிப் பதிவிடுகிறீர்களே எனப் பலரும் பல்வேறு விதமாக பதிவிட்டு ஜைனப்பை ட்ரோல் செய்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close