[X] Close
 

இப்படி ஒரு காரணத்தால் இம்ரான் கானைப் பிரிந்த மனைவி


dogs-back-wife-out-imran-khan-s-marriage-again-on-rocks

  • kamadenu
  • Posted: 25 Apr, 2018 17:28 pm
  • அ+ அ-

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் மூன்றாவது மனைவி நாய்தொல்லை காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளது செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ”இம்ரான் கான் மனைவி புஷ்ராவின் மத வழிபாடுகளுக்கு அவரது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய் ஒன்று இடையூறு செய்துள்ளது. இதனால் நாய் வீட்டில் இருக்கக் கூடாது என்று மனேகா சண்டையிட்டுள்ளார். எனினும் இதனை இம்ரான் கான் ஏற்றுல்கொள்ளாததால் மனேகா அவரை விட்டுப் பிரிந்திருக்குறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. 

முன்னதாக, இம்ரான் கானுக்கும் அவரது ஆன்மிக வழிகாட்டியான புஷ்ரா மனேகாவுக்கும் இடையே காதல் நிலவுவதாக ஊடகங்களில் பேசப்பட்டது. இதனை இம்ரான் மறுத்துவந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இம்ரான் கானும் புஷ்ராவும் திருமணம் செய்து கொண்டனர்.

முதல் இரண்டு திருமணங்கள்..

இம்ரான் கான் கடந்த 1995-ல் பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரரின் மகள் ஜெமீமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகளுக்குப் பின் அவரை விவாகரத்து செய்துவிட்டார். அந்தத் திருமணத்தின் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பின்னர் பாகிஸ்தான் டிவி தொகுப்பாளினி ரெஹ்மான் கானை கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்து கொண்டார். 10 மாதங்களிலேயே அந்த திருமணம் முறிந்து விவாகரத்து நடந்தது. இந்நிலையில் 3-வது மனைவியும் இம்ரான் கானை விட்டுப் பிரிந்தார். 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close