[X] Close

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி


new-zealand-terror-attack

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 19:41 pm
  • அ+ அ-

கிறிஸ்ட் சர்ச் மசூதி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  பிரெண்டன் டாரன்ட் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 49 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், ''நீதிமன்றத்தில் பிரெண்டன் டாரன்ட் ஏதும் பேசவில்லை. அவருக்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  வழக்கறிஞர் ஜாமீன் ஏதும் கூறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் மீதான குற்றத்துக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் தண்டனைகளை எதிர்கொள்ள இருக்கிறார். கைது செய்யப்பட்ட பிற நபர்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.கைது செய்யப்பட்ட எவருக்கும் குற்றப் பின்னணி இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து  நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்ரென் கூறும்போது, ''முக்கியக் குற்றவாளி துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வைத்திருக்கிறார். அவர் எவ்வாறு நியூஸிலாந்துக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் தற்போது கூறிக்கொள்கிறேன். நமது துப்பாக்கிச் சட்டம் மாற்றத்துக்கு உள்ளாகப்படும்'' என்றார்.

ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பல இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close