[X] Close

மக்களவை தேர்தலில் வெளியாகும் மோடி, ராகுல் வரலாறு குறித்த திரைப்படங்கள்: ஆணையத்திடம் சிக்குமா?


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 12:02 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் இனி தனது நிலத்தில் தீவிரவாதத்தை அனுமதிக்காது என்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலேயே நோக்கம் கொண்டுள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிந்த்தில் நடத்த பேரணி ஒன்றில் இம்ரான் கான்  பேசும்போது,  ”பாகிஸ்தான் தனது நிலத்தை எந்தக் காரணத்துக்காகவும்  தீவிரவாதம் பயன்படுத்த அனுமதிக்காது. இது புதிய பாகிஸ்தான். இது புதிய காலம். இந்த பாகிஸ்தான் அமைதியானது, நிலைத்தன்மையுடையது. பொறுப்புணர்வுள்ள நாடு.  நாங்கள் எந்த தீவிரவாத இயக்கமும் இங்கு செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

நாங்கள் பிடிப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை அவர் நாட்டுக்குதிரும்ப அனுப்பினோம். ஏனென்றால் எங்களுக்கு போர் தேவையில்லை.  நாங்கள் இந்தச் செய்தியை இந்தியாவுக்கு மீண்டும் தெரிவிக்கிறோம். 

நாங்கள் புல்வாமா தாக்குதல் விசாரணையில் இந்தியாவுக்கு உதவ முடிவு செய்திருக்கிறோம். இது பயத்தினால் எடுத்த முடிவு என்று யாரும் நினைக்க வேண்டாம்.  ஏனென்றால் நாங்கள் காணவிருக்கும் பாகிஸ்தான் வறுமையை ஒழிக்கும். எங்களது கொள்கைகள் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தானில் முன்னர் அனுமதித்தது எந்தக் காரணமாக இருந்தாலும், இனி இந்த மண்ணில் தீவிரவாத இயங்களை அனுமதிக்கமாட்டோம் என்று அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளோம்.

நான் பிரதமராக பதவியேற்றதும் இந்திய பிரதமர் மோடியிடம் துணை கண்டத்தில் ஏழ்மை நிலையில் மக்கள் உள்ளனர்.  நாம் நமது பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம்  தீர்க்க வேண்டும். நாம்  வறுமையை அகற்ற வேண்டும என்று பேசினேன்.  ஆனால் மோடியின் தேர்தல் பிரச்சாரம் வெறுப்பை விதைக்கும் வகையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

தர்பர்கர் மாவட்டத்தில் பாதி மக்கள் தொகை இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். இன்றைய இந்திய அரசு சிறுபான்மையினருக்கு செய்து கொண்டிருப்பதை பாகிஸ்தான் பிரதிப்பலிக்கவில்லை. நாங்கள் எங்களது  சிறுப்பான்மை மக்களை பாதுகாப்போம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close