[X] Close

‘மோதிரம்’ பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 06:51 am
  • அ+ அ-

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க  பாகிஸ்தான் தலைவர்கள் உறுதியாக இருப்பதாக சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14-ம் தேதி, ஜெய்ஷ் அமைப்பு நடத்திய புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாலகோட் தாக்குதலைத் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான்  எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்  இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க  பாகிஸ்தான் தலைவர்கள் உறுதியாக இருப்பதாக சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் இமரான் கான் முக்கிய அமைச்சர்களுடன் நடத்தியுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள பதற்றம், இரு நாடுகள் சார்ந்த நலன்கள் குறுத்தும் அல் ஜூபிர்,  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்   ஷா மஹ்மூத் குரேஷிவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close