[X] Close

அதிமுகவில் `களைகட்டுது' தேர்தல் களம்: ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4 தொகுதிக்கு வேட்பாளர்களாக தேர்வு


4

  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 09:44 am
  • அ+ அ-

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. இன்று பல நாடுகளிலும் விடுமுறை நாளாகும்.

மிகப்பெரிய இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம், உலகில் மிகச் சிறந்த பிரமுகர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது தனது ‘டூடுளை’ வித்தியாசமாக வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த 13 பெண்மணிகளின் அனுபவ மொழிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

இதில் சிறப்பு என்னவென்றால் இங்கு இடம்பெற்றுள்ள சாதனைப் பெண்களின் தாய்மொழியிலேயே அவை இடம் பெற்றுள்ளன. வண்ணமயமான ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ள இந்த அனுபவ மொழிகளுக்கு அருகிலேயே ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது.

அவற்றின் தொகுப்பு கீழே:

நம்மைப் பற்றி மற்றவர்களின் நினைக்கும் கற்பனைகளுக்கெல்லாம் எல்லையே இல்லை.

-- டாக்டர். மேயி. ஜாமிசன், அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் மருத்துவர்

கால்களை உயர்த்தி, சிறகுகள் கொண்டு பறப்பேன் என்றால், நான் எந்தவிதத்தில் அவர்களுக்கு தேவைப்படுவேன்.

--  ஃபெரிடோ காலோ, மெக்ஸிகன் ஓவியக்கலைஞர்

 உன்னுடைய மிக உயர்ந்த உள்ளார்ந்த சத்தியத்தைத் தவிர இந்த உலகோடு பிணைத்துக்கொள்ள வேறெதுவுமில்லை.

--  எம்மா ஹெர்வெக், ஜெர்மன் எழுத்தாளர்

தனியாகக் காணும் கனவு அதுவெறும் கனவுதான். ஒரு கனவை நீங்கள் ஒன்றாகக் காணும்போது அது நிஜமாகிறது.

--  யோகோ ஓனோ, ஜப்பானிய மல்டிமீடியா கலைஞர்

 ஏமாற்றங்களையும் நம் மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் விலைமதிப்பற்றவர்களாக இருப்போம்.

--  என்எல் பெனோ சீபைன், பார்வையற்ற இந்திய தூதர், (ஐஎப்எஸ்)

நான் பலவீனமானவள் என்று சொல்லாதே, ஏனெனில் நீ ஒரு பெண்.

--  மேரி கோம், இந்திய குத்துச்சண்டை வீரர்

நான் என்னைவிட வலிமையானவள்

--  கிளாரிஸ் லிஸ்பெக்டர், பிரேசிலிய நாவலாசிரியர்

எதிர்காலம் குறித்த திட்டங்களில் எப்போதும் உண்மையில் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

--  ஜஹா ஹதீத், பிரிட்டிஷ்-ஈராக் கட்டிடக்கலைஞர்

தைரியம், எல்லா இடங்களிலும் தைரியமாக நடந்துகொள்ளுங்கள் என்று சொல்லித்தருகிறது.

--  மிலிசென்ட் ஃப்யூசெட், பிரிட்டிஷ் எழுத்தாளர், செயற்பாட்டாளர்

அவர்கள் பரந்து விரிந்த வானில் லேசாகப் பறக்கும்போது மட்டுமே அவர்கள் சிறகுகளுக்கு சுதந்தரம் உண்டு. ஆனால் ஒருமுறை திரும்பிவிட்டார்களென்றால் அவர்கள் எடை கூடிவிடுகிறார்கள்.

--  மெரினா சுவேவேவா, ரஷ்ய கவிஞர்

கடந்த காலத்தைவிட எதிர்காலத்தை மேலும் அழகாக எழுப்ப முடியும்.

--  ஜார்ஜ் சாண்டோ, பிரஞ்சு நாவலாசிரியர்

ஒரு நபர் வலிமையாக இருக்க குறைந்தபட்சம் அவரது கனவுகூட ஒரு காரணமாக உள்ளது.

--  சன்மாவோ, சீனாவில் பிறந்த தைய்வானிய எழுத்தாளர்.

நான் முக்கியமானவள். நான் சமமான முக்கியத்துவம் கொண்டவள்.  குறிப்பிட்ட ஒன்றுக்காக மட்டும் அல்ல, நீடித்த காலததுக்குமல்ல, நான் முக்கியமானவள். அவ்வளவுதான்.

--  சினமந்தா அடிச்சே, நைஜீரிய எழுத்தாளர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close