[X] Close

ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; பலர் காயம்


afghan

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 23:08 pm
  • அ+ அ-

ஆப்கன் தலைநகர்  காபூலில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள், ''ஆப்கன் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் ஆப்கன் அரசியல் தலைவர் அப்துல்லா மற்றும் பிற அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட  நிகழ்வு ஒன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நடந்தன.

இந்தக் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் குறித்து ஆப்கனின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வஹிதுல்லா கூறும்போது, ''தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாரும் பதற்றமடைய வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றில் புதன்கிழமை தீவிரவாதி ஒருவர் தனது உடம்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் 16 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close