[X] Close

இந்தியா மீது தாக்குதல் தொடுக்க பாக். உளவுத்துறை ஜெய்ஷ் அமைப்பைப் பயன்படுத்தின: முஷாரப்


former-president-musharraf-indicates-pakistan-intelligence-used-jem-to-target-india-during-his-tenure

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 16:47 pm
  • அ+ அ-

எனது பதவி காலத்தில் பாகிஸ்தான் உளவுத் துறை ஜெய்ஷ்- இ -முகம்மது தீவிரவாத அமைப்பை
இந்தியாவை தாக்க பயன்படுத்தியது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹம் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முஷ்ரப் தெரிவித்துள்ளார்.

அதில்  முஷ்ரப் கூறும்போது, "2003 ஆம் ஆண்டில் ஜெய் ஷி முகமத் அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட ப நடவடிக்கை வரவேற்கதக்கது. அவர்கள் எப்போது தற்கொலைப் படை தாக்குதலை நடத்துபவர்கள். இருமுறை என்னை கொலைச் செய்ய முயற்சி மேற்கொண்டனர். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனது பதவி காலத்தில் பாகிஸ்தான் உளவுத் துறையினர் ஜெய் ஷி முகமத் அமைப்பினரை இந்தியா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்திக் கொண்டனர்.

முஷ்ரப் அவரது பதவி காலத்தில் ஏன் ஜெய் ஷி முகமத் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு, ”அப்போது இருந்த காலம் வேறு, இந்தியா பாகிஸ்தான்  இரு நாடுகளும் ஒருவர் பகுதி மீதுமற்றொருவர் தாக்குதலை நடத்தினர்” என்றார்.

>புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது, இயக்கம் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளரும் ராணுவ மேஜர் ஜெனரலுமான ஆசிப் கஃபூர் தெரிவித்திருந்த நிலையில் முஷ்ரப் இதனை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close