[X] Close

கொழும்பு வைரவியாபாரியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரிதான வைரம் மீட்பு: இலங்கை போலீஸார் அசத்தல்


sri-lankan-police-recover-rare-stolen-diamond

கொழும்பு வைர வியாபாரியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வைரம்.

  • பால்நிலவன்
  • Posted: 05 Mar, 2019 18:50 pm
  • அ+ அ-

கடந்த ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதாக கருதப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெருமானமுள்ள அரிதான வைரத்தை இன்று இலங்கை போலீஸார் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை போலீஸார் சினுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த விவரம்:

கொழும்புவின் புறநகரில் உள்ளது பான்னிபிட்டியா பகுதி. இங்கு வசித்துவந்த ரத்தின வியாபாரி உலகின் பலவகையான ரத்தினக் கற்களையும் வைத்துள்ளார். இவரிடமிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள வைரம் காணாமல் போயுள்ளது.

அமெரிக்க டாலரில் அதன் மதிப்பு 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய பணத்தில் ரூ.1,90,31,08,500 ரூபாய் மதிப்பு). அவரிடமிருந்து திருடுபோனது வேறெங்கும் காணக்கிடைக்காத மிகவும் அரிதான வைரம் ஆகும்.

வைரக்கல் கொள்ளைநடந்த வழக்கில் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இன்று பனதுரா நகரில், சந்தேகப்படும்படியான நபர் ஒருவரை பிடித்தனர்.

அவரிடம் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

அவரிடமிருந்த ரத்தினங்களை பரிசோதித்தபோது பான்னிபிட்டியா புறநகர் வியாபாரியிடமிருந்து திருடப்பட்ட வைரம் இருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில், ஒரு போதை கடத்தல் மன்னனின் வழிகாட்டுதலில் போலீஸ் வேடமிட்ட ஒரு கொள்ளைக்கும்பல் வியாபாரியின் வீட்டில் வலுக்கட்டாயமாக நுழைந்து இவ்வைரத்தையும் நவரத்தினங்களைம் திருடி வந்ததது தெரியவந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close